மோசர்பேர் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக இருந்து சினிமா தயாரிப்புகளில் ஈடுபட்டதிலிருந்துதான் கோடம்பாக்கத்திற்கு அறிமுகமானார் தனஞ்ஜெயன். அவரது தவறான கணிப்புகளும், அனுகுமுறைகளும் மோசர்பேர் நிறுவனத்திற்கு நஷ்டத்தையே கொடுத்தது.
காலப்போக்கில் அவரை வெளியே தூக்கி போட்டது மோசர்பேர் நிறுவனம். அதன் பிறகு யுடிவி நிறுவனத்தில் தஞ்சமடைந்தார் தனஞ்ஜெயன். இந்த இடத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை தனஞ்ஜெயனால். கணக்கு வழக்கில் தில்லு முல்லு செய்ததாக நிர்வாக தலைமையின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். விரைவில் இங்கிருந்தும் அவர் வெளியேற்றப்படுவார் என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தனது வாய்க்கொழுப்பால் இன்னொரு சிக்கலிலும் மாட்டியுள்ளார். ஒரு ஆங்கில பத்திரிகையில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தமிழ் படங்கள் பற்றிய ஒரு பகுப்பாய்வு கட்டுரை ஒன்றினை எழுதிருந்தார் தனஞ்ஜெயன். அக்கட்டுரையில் முதல் கட்ட இயக்குனர்கள், இரண்டாம் கட்ட இயக்குனர்கள் என நான்கு பிரிவுகளாக பிரித்து எழுதி இருந்தார். அதைபோல் சில தமிழ் படங்களை பற்றியும் இழிவாக எழுதி இருந்தாராம்.
தனஞ்ஜெயனின் இந்த செயல் இயக்குனர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் இயக்குனர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டார். இனியும் சாக்கு போக்கு சொல்லி சமாளிக்க முடியாது என்பதை புரிந்துகொண்ட தனஞ்ஜெயன், அங்கு கூடியிருந்த இயக்குனர்களிடம் வாய்மொழியாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். எனினும் அது போதாது என்று உதவி இயக்குனர்கள் கூட்டம் குமுறவே, வேறு வழியின்றி “இனி இயக்குனர்கள் பற்றியோ தமிழ் சினிமா பற்றியோ தவறாக எழுதவோ பேசவோ மாட்டேன்” என எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதன் பிறகே, அவரை அனுப்பி வைத்திருக்கிறது இயக்குனர்கள் சங்கம்.
No comments:
Post a Comment