Tuesday, November 15, 2011

உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASS

Trial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல்போனிலிருந்து கால் செய்யவும்.கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செய்து பார்க்கவும். உங்கள் செல்போனிலிருந்து கால் செய்யமுடிய்வில்லையெனில் நிச்சயமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளவும்.

வீடியோ கேமராவிற்குறிய பைபர் ஆப்டிக் கேபிளின் அலைவரிசை செல்போனின் அலைவரிசையுடன் இடையூறு செய்யும்போது உங்களால் கால் செய்ய முடியாது.



இருவழி கண்ணாடி என்பது நம்மால் கண்ணாடிக்கு பின்புறம் இருப்பவரை பார்க்க முடியாது ஆனால் அவரால் நம்மை பார்க்க முடியும்.
நீங்கள் ஹோட்டல் அறையிலோ அல்லது குளியளறையிலோ கண்ணாடி இருப்பதை கண்டால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் கண்களால் வித்தியாசத்தை உணர முடியாது.

உங்கள் விரல் நகத்தைக் கொண்டு கண்ணாடியைத் தொடவும். உங்கள் நகத்திற்கும் கண்ணாடியில் தெரியும் உருவத்திற்குமிடையில் இடைவெளி இருக்குமெனில் அது சாதாரண ஒரு வழி கண்ணாடி. ஏனெனில் சாதாரண கண்ணாடியின் பின்பக்கம் சில்வர் பொருத்தப்பட்டிருக்கும்.

இருவழி கண்ணாடியில் சில்வர் பின்புறமிருக்காது. ஆகவே இடைவெளி இல்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள் உங்களை கண்ணாடியின் பின்புறமிருந்து யாரேனும் பார்க்கவும் செய்யலாம்.

No comments:

Post a Comment