Monday, November 14, 2011

கருணாநிதிக்கு தன் பிறப்பின் மீது எழுந்துள்ள சந்தேகம்!

ஜனநாயகத்தின் நான்காம் தூணாகக் கருதப்படுவது பத்திரிகைகள் . அவை ஜனநாயகத்தின் நண்பனாக கருதப்படுவதால், நாயகர்களின் தவறை அவை சுட்டிக்காட்டும்போது, அதற்கு மதிப்பளித்து நல்ல அரசியல்வாதிகள் தங்கள் செயல் பாடுகளை செம்மைப் படுத்திக் கொள்கிறார்கள். இந்த மரபு ஆரோக்கியமான ஜனநாயகம் உள்ள நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையிலும் உள்ளது. பத்திரிகைகள் தவறான விமர்சனங்களை எழுதினால், அரசியல் தலைவர்கள் தம் பக்கத்து நியாயங்களை நிறுவிவிட்டு, பத்திரிகைகளைக் கண்டித்தல் , நீதிமன்றம் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர் . ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஹிட்லர், கடாபி, முசோலினி போன்ற கொடுங்கோலர்கள் தான், பத்திரிகை விமர்சனங்களை ராஜ துரோகம் எனக் கருதி, காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், சி.பி.ஐ கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பின்லாந்து நாட்டிற்கு ஆவணங்களுடன் தப்பி விட்டதாக குமுதம் டாட் காம் ஒரு செய்தியைப் பதிவு செய்தது. இதே செய்தி, தினமணியிலும் வெளிவந்தது.
இதற்கு முரசொலி பத்திரிகையில் கருணாநிதி, தினமணி ஆசிரியரின் தாய் பத்தினி என்றால்... இந்தச் செய்தியை எழுதியவரின் தாய் பத்தினி என்றால்... இப்படி என்றால் என்றால் என்று அவர் போற்றி வளர்த்த நாகரித்தின்படி சவால் விட்டு, இந்தப் புகாரை நிரூபிக்கட்டும் என்று எழுதச் சொல்லியுள்ளார்.
கலாநிதி மாறன் பின்லாந்து செல்லவில்லை என்று கருணாநிதியால் நிரூபிக்க முடியுமா? கலாநிதியின் கடவுச் சீட்டை (passport) இவர் காட்டச் சொல்வாரா? இதற்காக நிருபர் கூட்டத்தைக் கூட்டி பாஸ் போர்ட் பிரதிகளை கருணாநிதி கொடுத்தால், அதை ஏற்க முடியாது.
ராசாத்தி அம்மாள் வீட்டை 1971 ல் வாங்கியதாக, போலி பத்திரம் தயாரித்தவரல்லவா கருணாநிதி?
1971 ல் பதிவு செய்யப்பட்ட பத்திரம், 1975 ல் அச்சிடப்பட்டதை சர்காரியா நிரூபித்துள்ளார்.
சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்திவிட்டு, நீதி மன்றத்தில் நான் எரித்தது வெறும் தாள் தான் என்று மொழி கொடுத்த நேர்மையாளர் தான் கருணாநிதி. அதனால் வழக்கமாக குற்றம் புரியும் ஒருவர் (habitual offender) காட்டும் நகல் ஆவணத்தை நம்ப முடியாது. தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவின் முன் அசல் பாஸ் போர்ட்டுடன் இன்று கலாநிதி மாறன் ஆஜராகத் தயாரா?

தினமணி ஆசிரியர் பத்தினிக்குப் பிறந்தவர் என்றால்....? என்று இன்று கேள்வி எழுப்பும் கருணாநிதி, 1968 ல் கனிமொழி என் மகளே இல்லை என்று தானே நீதி மன்றத்தில் சொன்னார். கருணாநிதிக்கு கனிமொழி என்ற மகள் இருக்கிறாள் என்று தைரியத்துடன் எழுதிய திரு. M.K.T. சுப்பிரமணியத்தை அவதூறு வழக்கில் சிறைக்கு அனுப்பினார்.
ஆனால் இப்போதோ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கனிமொழி என் மகள் என்று கொஞ்சுகிறார்.
இன்றைய மகள் அன்று யாருக்கு பிறந்தார்? எது உண்மை?
கனிமொழி கருணாநிதியின் மகள் என்றால், கருணாநிதி நீதி மன்றத்தில் பொய் சொன்ன குற்றத்திற்கு சிறை செல்ல வேண்டாமா? உண்மையை மறைத்து, ஒரு நிரபராதியை சிறைக்கு அனுப்பிய குற்றவாளி, 43 ஆண்டுகளுக்குப் பின் அதே தவற்றைச் செய்யப் போகிறாரா?

தினத்தந்தி பத்திரிகை கருணாநிதியை விமர்சித்து ஒரு செய்தி வெளியிட்டது. துடித்தெழுந்தார் கருணாநிதி!
முகத்தில் தோன்றியவர்களின் பத்திரிகைகள் என்னை விமர்சிக்கிறார்கள், காலில் தோன்றிய தினத்தந்தியும் என்னை விமர்சிக்கிறதே? என்று வழக்கம்போல் சாக்கடைத்தனத்தைக் காண்பித்தார்.
இவரை யாராவது விமர்சித்தால் நான் காலில் தோன்றியவன் என்று தனக்குத் தானே பரிதாபத்தைத் தேடப் பார்ப்பார்.

உண்மையில் இவர் யார்?

ஆழ்வார்பேட்டை நாகபாசத்தார் செப்பேட்டைப் பாருங்கள் .

"நாலு முகத்திலே இருக்கிற நாகபாசத்தாரும்" (வரி 9)
......................................................................................
......................................................................................
வட முகம் தென் முகம் கீழ் முகம் மேல் முகம்
நாலு முகத்திலே இருக்கிற நாக பாசத்தாரும் (வரி 46,47)

( தமிழக செப்பேடுகள் தொகுதி 1, தமிழ் நாடு தொல்லியல் துறை, 2005, பக்.182-185)
பிரம்மனுக்கு நான் முகன் , இசை முகன் என்ற பெயர்கள் உண்டு.
கருணாநிதி நாகபாசத்தார் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த செப்பேட்டின்படி மட்டுமல்ல... இவர் அடிக்கடி பரிதாபத்தைத் தேடிக் கூறுகின்ற வர்ணப்படி, இவர் பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்; இப்படி இருக்க, நான் காலில் பிறந்தவன் என்று இவர் கூறுவது, இவர் பிறப்பின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாகத் தானோ என்னவோ இவர் அடுத்தவர்களின் பிறப்பை கேள்விக்குள்ளாக்குகிறார் ?

1968ல் கனிமொழி மகள் இல்லை என்றார், இப்போது என் மகள் என்கிறார்.

இவர் பிறந்தது முகத்தில் தோன்றிய சமுதாயம், ஆனால் இவர் சொல்வதோ, நான் பாதத்திலிருந்து பிறந்தேன் என்று.

இதன் காரணமாகத்தான் நாஞ்சில் மனோகரன் கருவிலே குற்றம் என்று எழுதினாரோ ?

1970ம் ஆண்டு, அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் உதய குமார் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார் . கருணாநிதியோ, உதய குமாரின் தந்தை பெருமாள் சாமியை, உதய குமார் தன் மகனே இல்லை என்று அறிவிக்க வைத்தார். குடும்ப உறவை விரும்பதவரோ என்னவோ? எப்பவுமே இவர் இப்படித் தான் .

தன்னை விமர்சிப்பவர் மீது இவர் வீசும் வார்த்தைகளையும், எழுத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு வள்ளுவனின் வாக்கில் இவரை திறனாய்வு செய்தால்,
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
(குறள். 959)

தினமணி ஆசிரியரின் தாய் பத்தினி என்றால்...? இது கருணாநிதியின் வாய்ச்சொல்.
இதிலிருந்து, கருணாநிதியின் பிறப்பின் மீது அவருக்கே உள்ள ஐயத்தைப் புரிந்து கொள்ளலாம்...

No comments:

Post a Comment