வலியைக் குறைக்க வேண்டும் என்பதற் காக ஒரே நேரத்தில் மொத்த மாத்திரை களையும் போட்டுக் கொண்டால் நோய் குணமாகாது, நோயாளிதான் செத்துப் போவார். ஜெயலலிதா அரசு ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பால், பஸ் என்று அதிர்ச்சி கொடுத்திருப்பதைப் பார்த்தால், மக்களைப் பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதுதான் தெரிகிறது.
ஓர் அரசு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்ந்தால்தான் மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை எவ்விதமான குறுக்கீடுகளும் இன்றி நிறைவேற்ற முடியும். தவறு செய்தவர்கள் மீது தைரியமாக நடவடிக்கை எடுக்கமுடியும். அதற்காகத்தான் ஜெயலலிதாவை மக்கள் தேர்வு செய்து, நல்ல மெஜாரிட்டியும் கொடுத்தார்கள்.
ஆனால் முதல்வரின் செயல்பாடுகள் மக்களை மகிழ்விப்ப தாக இல்லாமல், சர்வாதிகாரத்தைக் காட்டி மிரட்டும் பாணி யில் இருக்கிறது. இன்னும் மத்திய அரசு மீதும்.... கடந்த ஆட்சியின் மீதும் குறை சொல்வது என்ன நியாயம்? இது உண்மைதான் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சொல்லி இருப்பது போன்று, உள்ளாட்சித் தேர்த லுக்கு முன்னரே இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாமே? இனிமேல் மக்களிடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றதும், மக்களை அலட்சியப்படுத்தி விலையை உயர்த்தி விட்டார்.
இப்படி ஒரு முடிவை எடுப்பதற்காக, மெஜாரிட்டியை ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்வதைப் பார்த்தால் பயம்தான் வருகிறது. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ?
No comments:
Post a Comment