Saturday, November 12, 2011

கார் டிக்கிக்குள் மறைந்து கொண்டு, தப்பியோட முயன்ற வி.ஐ.பி.!

பிரேசில் நாட்டின் மிகப் பிரபலமான மற்றும் மிகப் பலமுள்ள நபர், ஒரு காரின் டிக்கிக்குள் படுத்தபடி தப்பிச் செல்ல முயன்றபோது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். நகரத்தின் ஒரு பகுதியையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சொந்த சாம்ராஜ்யம் நடாத்திய இவர், ஒரு போதைப் பொருள் கடத்தல்காரர்!

அந்தோனியோ லோபெஸ் என்ற இவரது முழுப் பெயரை அறிந்தவர்கள் குறைவு. மக்கள் மத்தியில் அறியப்பட்ட பெயர் நெம் என்பதுதான். ஆடம்பரமாக ஆர்மானி சூட்கள் அணைிந்து வலம்வரும் நெம், தனது மனைவி ரியோ டி ஜெனிரோ நகரைச் சுற்றிப் பார்க்க அடிக்கடி ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்கும் அளவுக்கு பகட்டான ஆள்.

பிரேசில் நாட்டு காவல்துறை பல வருடங்களாக இவரைக் கைது செய்ய முயன்ற போதிலும், அவரை நெருங்க முடியவில்லை. காரணம், இவர் இருக்கும் இடம் அப்படி! இடத்தின் பெயர், ரோசின்ஹா. பிரேசிலின் மிகப்பெரிய சேரிப்பகுதி அதுதான். இந்தப் பகுதி இவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. இவரது ஆட்களை மீறி யாரும் உள்ளே நுழைய முடியாது.

இவர் சேரிப்பகுதியை விட்டு வெளியே வந்தால்தான் கைது செய்ய முடியும் என்ற நிலையில், சேரிப் பகுதியின் எல்லைக்கு வெளியே செக் போஸ்டுகளை அமைத்து வருடக் கணக்கில் காத்திருந்தது போலீஸ்! ஆனால், கைது செய்ய முடியவில்லை. காரணம், கடந்த 5 வருட காலமாக இவர் சேரிப்பகுதிக்கு வெளியே சென்றதில்லை.

முழுமையாக குடிசை போன்ற சிறிய வீடுகளைக் கொண்ட சேரிப் பகுதியின் நடுவே, நெம் தனது பகட்டான மாளிகையை கட்டியிருந்தார். கொக்கெயின் கடத்தலில் ஈடுபட்ட இவரது குழுவின் மாத வருமானம், 5 மில்லியன் டாலர்!

இவ்வளவு பந்தாவாக வாழ்ந்து வந்தவர் எப்படி அகப்பட்டுக் கொண்டார்? சேரிப்பகுதி அமைந்துள்ள

அந்தோனியோ லோபெஸ் என்ற இவரது முழுப் பெயரை அறிந்தவர்கள் குறைவு

ரியோ டி ஜெனிரோ நகரில் 2014-ல் வேர்ல்டு கப் ஸாக்கர், மற்றும் 2016-ல் சம்மர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. விளையாட்டுப் போட்டிகளுக்காக நகரை அழகு படுத்தும் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. நகரை அழகு படுத்துவதில் முக்கிய ப்ராஜெக்ட், நகரில் உள்ள சேரிப் பகுதிகளை அகற்றுவது.

ஆஜென்டீனா மற்றும் அமெரிக்க உதவிகளுடன், இந்த சேரிப் பகுதிகள் அகற்றப்படவுள்ளன. நகருக்குள் அமைந்துள்ள 3 சேரிப் பகுதிகளில் மிகப் பெரியது, நம்ம நெம்மின் கட்டுப்பாட்டிலுள்ள ரோசின்ஹா!

அடுத்த வாரம் முதல் இந்த வேலைகள் ஆரம்பமாக உள்ளன. சேரிப்பகுதி அழிக்கப்பட்டால், நெம்மின் பாதுகாப்பு வளையம் நொருங்கிப் போகும். அதற்குமுன் அங்கிருந்து வெளியேற முடிவு செய்த அவர், கார் ஒன்றின் எக்கிக்குள் படுத்து மறைந்தபடி வெளியேற முயன்றிருக்கிறார். இவர் வெளியேறுவார் என எதிர்பார்த்திருந்த போலீஸ், ஆளை அமுக்கி விட்டது!

இவரோடு அகப்பட்டவர்களில், இவரது நெருங்கிய சகாக்கள் மூவரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் தன்னை கொங்கோ (ஆபிரிக்கா) நாட்டின் கௌரவ தூதர் என அறிமுகம் செய்து கொண்டார். வெளிநாட்டு தூதர்களுக்கு வழங்கப்படும் ராஜதந்திர பாதுகாப்பு (Diplomatic Immunity) தனக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்!

No comments:

Post a Comment