Friday, November 18, 2011

மோடியின் சீனப் பயணம்;கலங்குது காங்.,

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சீனப் பயணம், மத்திய அரசியலில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, அங்கு சென்றுள்ள மோடி, "குஜராத்திற்கு வந்து தொழில் துவங்குங்கள்' என, சீனாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே, சீனாவில் மோடி என்ன செய்கிறார், யாரைப் பார்க்கிறார் போன்ற விவரங்களைத் திரட்ட, இரண்டு அதிகாரிகளை, மத்திய அரசு நியமித்துள்ளது.குஜராத்தில் தொழில் துவங்கத் தயாராகும் சீன நிறுவனங்களுக்கு, உடனுக்குடன் நிலம் வழங்கத் தயாராக இருப்பதாக, மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் முக்கிய நபர்களைச் சந்திக்கும் போது, சீன மொழியில் அச்சடிக்கப்பட்ட, தன் "விசிட்டிங் கார்டை' கொடுத்து அசத்தியுள்ளார். சீன மொழிப் பள்ளி ஒன்றை, குஜராத்தில் துவங்கவும் உறுதி மொழி அளித்துள்ளார்."இந்த முயற்சியை, நாம் மேற்கொண்டிருக்க வேண்டும்' என, மிகத் தாமதமாக உணரத் துவங்கியுள்ளனர், காங்கிரசார்!

No comments:

Post a Comment