Wednesday, November 16, 2011

பாகிஸ்தானுக்கு குறிவைக்க பொருத்தமான ஒரு இந்திய ஏவுகணை

இந்தியாவின் ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தில் இன்று புதிய அத்தியாயமாக, அக்னி-4 ஏவுகணை டெஸ்ட்-பயர் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. பாலஸ்டிக் வகை ஏவுகணையான அக்னி-4, தரையில் இருந்து தரைக்கு (surface-to-surface) ஏவப்படக்கூடிய இன்டர்மீடியட் ரக ஏவுகணை. இதன் ரேஞ்ச், 3,000 கி.மீ. (பாகிஸ்தானை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டது)அக்னி-4, இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தில்
இரு விஷயங்களில் முக்கியமானது. ஒன்று, மொபைல் டவுஞ்சரில் வைத்து இயக்கப்படக் கூடியது. அதாவது, சம்பிரதாயமான டவுஞ்சிங் பேட்டில் வைத்துத்தான் ஏவ வேண்டும் என்றில்லாமல், விரும்பிய இடத்துக்கு எடுத்துச் சென்று, ஏவமுடியும்.

இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடு ஒன்றின்மீது ஏவ வேண்டுமென்றால் (பாகிஸ்தான் அல்லது சீனா) எல்லைக்கு மிக அருகே வரை கொண்டு சென்று, அங்கிருந்து ஏவலாம். எல்லையில் இருந்து 3,000 கி.மீ. இன்டீரியர் வரை இலக்கு வைக்கலாம்.இரண்டாவது முக்கியத்துவம், இதன் வார்-ஹெட்டில் அணு ஆயுதங்களை பொருத்தி ஏவலாம்.ஒரிசா கடலோரத்துக்கு அருகேயுள்ள தீவு ஒன்றில் இருந்து இன்று காலை 9 மணிக்கு ஏவப்பட்ட அக்னி-4, அதன் டார்கெட்டட் தொலைவான 3,000 கி.மீ. வரை சென்று வெடித்துள்ளது. குறைவான பே-லோட் (வெடிப்பொருளின் எடை) உடைய ஏவல் என்றால் (உதாரணமாக அடோமிக் வார்-ஹெட்) 3,500 கி.மீ. வரை வெலுத்தலாம் என்கிறார்கள். எப்படியோ, உத்தரவாதமாக 3,000 கி.மீ. வரை செல்லும்!20 மீட்டர் நீளமான அக்னி-4, 17 டன் (17,000 கிலோ) எடை உடையது. மேக்ஸிமம் பே-லோட் 1000 கிலோ. இதன் அர்த்தம், 1000 கிலோ அல்லது 1 டன் உடையுள்ள வெடிகுண்டை காவிச் செல்லக்கூடியது.


இந்திய ஏவுகணைத் திட்டத்தில் இந்த அக்னி சீரீஸ் ஏவுகணைகளில், அக்னி-2 2,000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடியது. அக்னி-3, 3,500 கி.மீ. வரை செல்லக்கூடியது. இதற்கு அடுத்த மாடலான அக்னி-4 3,000 கி.மீ.வரைதான் செல்லக்கூடியது. அது ஏன் அப்படி திட்டமிடப்பட்டுள்ளது?
மீடியம் ரேஞ்ச் பாலஸ்டிக் மிசைல் 3,500 கி.மீ. தொலைவுவரை செல்லும்போது, அதன் ஸ்டாபிளிட்டி குறைகிறது என்கிறார்கள். எளிமையான தமிழில் சொன்னால், பாதித் தொலைவில் உதறத் தொடங்குகிறது. இது, இலக்கைத் தாக்கும் சாமத்தியத்தை கணிசமாகக் குறைத்து விடுகிறது. அதனால்தான், அக்னி-3, 3,500 கி.மீ. ரேஞ்சில் இருக்க, அக்னி-4, 3,000 கி.மீ. ரேஞ்சுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment