Wednesday, November 23, 2011

வீட்டில் கொள்ளை அடித்துவிட்டு 3 ஆயிரம் கி.மீ. தப்பியவனை காட்டி கொடுத்தது லேப்டாப் : ஜிபிஎஸ், வெப்கேம் கலக்கல்!

மாட்ரிட் : வீட்டில் கொள்ளை அடித்துக் கொண்டு சுமார் 3 ஆயிரம் கி.மீ. தூரம் தப்பிய திருடனை, அவன் திருடிய லேப்டாப்பே காட்டிக் கொடுத்தது. இந்த சுவாரஸ்ய சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது. ஸ்பெயினின் டெனரைப் தீவு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பிரிட் விசில் (47). அவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது.



யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையன் வீடு புகுந்து கரன்சி மற்றும் விலைமதிப்பு மிக்க எலக்ட்ரானிக் பொருட்களை திருடிக்கொண்டு தப்பினான். வெளியே சென்றுவிட்டு திரும்பிய பிரிட் அதிர்ச்சி அடைந்தார். போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து சோதனை நடத்தினர். ஆனால், தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், திருட்டு பற்றி தனது பார்ட்னர் டேவிட்டிடம் பிரிட் சொன்னார். டேவிட் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அசாத்திய திறமை வாய்ந்தவர். என்னென்ன பொருள் கொள்ளை போனது என்று விசாரித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் மெக்புக்ஸ் நோட்புக் கம்ப்யூட்டர்கள் (லேப்டாப்) இரண்டையும் காணவில்லை என்றார் பிரிட். திருடுபோன நேரத்தில் யுஎஸ்பி இன்டர்நெட் இணைப்பு இருந்தது என்றும் சொன்னார்.

டேவிட்டுக்கு பொறி தட்டியது. உடனே தனது லேப்டாப்பை விரித்தார். இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்ற லேப்டாப்களை தொடர்பு கொள்ளும் ரிமோட் கன்ட்ரோல் சாப்ட்வேரை இயக்கினார். அதன் உதவியுடன், திருடுபோன லேப்டாப்பை தொடர்பில் வரச்செய்து, அதன் மாஸ்டர் பாஸ்வேர்டை மாற்றினார். பின்னர், அதில் உள்ள வெப்கேமராவையும் ஜிபிஎஸ் வசதியையும் இங்கிருந்தபடியே இயங்க செய்தார். அதற்குள், சுமார் 3,000 கி.மீ. தாண்டிப் போயிருந்த திருடன், ‘திருடிய லேப்டாப் தேறுகிறதா’ என்று பார்க்க, அதை விரித்து வைத்திருந்தது பிரிட்டின் அதிர்ஷ்டம். அவன் வைத்திருந்த லேப்டாப்பில் வெப்கேமராவும் ஜிபிஎஸ் கருவியும் இயங்க ஆரம்பித்தது. அவனது முகமும் பின்புற லொக்கேஷனும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. ஜிபிஎஸ் உதவியுடன் இருப்பிடமும் தெரியவந்தது. கிளைமாக்ஸில் போலீசார் விரைந்து சென்று அவனை கைது செய்தனர். ‘‘கிரைம்களை டெக்னாலஜி ஓவர்டேக் செய்யும் காலம் இது’’ என்று சொல்லி சிரிக்கிறார் கம்ப்யூட்டர் கில்லாடி டேவிட்.

No comments:

Post a Comment