Tuesday, November 29, 2011

கனிமொழிக்கு ஜாமீன்! -டெல்லி திருப்பம்!

"டிசம்பர் 1! சோனியா ஆட்சிக்கு கலைஞர் தரும் ஷாக்'’ என்ற தலைப்பில், கலைஞர் தனக்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டதையும், சி.பி.ஐ.மூலம் கேம் ஆடும் காங்கிரஸுக்கு அவர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தயாராகிவிட்டதையும் கடந்த இதழில் ரிப்போர்ட் ஆக்கியிருந்தோம். காங்கிரஸுக்குக் கூட்டணி மூலம் கைகொடுத்துவரும் மம்தாவும் சரத்பவாரும் எதிர்ப்பான மனநிலையில் இருக்கும்
இந்த நேரத்தில் தி.மு.க.விடம் இருக்கும் 18 எம்.பி.க்களின் பலத்தை காங்கிரஸால் இழக்க முடியாது என்பதையும் அதில் சுட்டிக்காட்டியிருந்தோம்.


இதைத்தொடர்ந்து எங்கோ இடி இடிக்க, 23-ந் தேதி எவரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்பெக்ட்ரம் வழக்கிலேயே முதல்முதலாய் ஸ்வான் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அதிகாரிகளான ஹரிநாயர், கௌதம் தோஷி, சுரேந்திரா, யுனிடெக் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகிய 5 பேருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி சட்டத்துறை வட்டாரத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


சுப்ரீம்கோர்ட் நேரடியாக இந்த வழக்கைக் கண்காணிப்பதால், வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றமும் டெல்லி உயர்நீதிமன்றமும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து ஜாமீனை நிராகரித்து வந்த நிலையில், இப்போது சுப்ரீம்கோர்ட்டே இப்படியொரு தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. தலைக்கு 5 லட்ச ரூபாய் ஸ்யூரிட்டி கொடுத்து டில்லியிலேயே தங்கியிருக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு, ஜாமீனில் அவர்கள் 5 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட்டுவிட்டனர்.


முன்னதாக, இந்த வழக்கில் மேற்கண்ட 5 பேரின் சார்பாகவும் வாதாடிய ராம்ஜெத்மலானி, தீர்ப்பு 23-ந் தேதிக்கு ஒத்திவைத்ததைப் பார்த்து ‘""பெயில் உண்டா, இல்லையா என்பதை மட்டுமாவது அறி வித்துவிடுங்கள். மற்றபடி தீர்ப்பு முழுதையும் பிறகு நீங்கள் அறிவிக்கலாம்''’ என ஆர்வத்தோடு கேட் டார். அப்போது நீதி பதிகளோ, சஸ் பென்ஸ் புன்னகை யை மட்டும் வீசிவிட்டு எழுந்தார்கள். அவர்களின் சஸ்பென்ஸ் புன்னகை நல்ல தீர்ப்பாக இப்போது மலர்ந்துவிட்டது.


இந்தத் தீர்ப்பைக்கேட்டு திகார் சிறையில் இருக்கும் மற்றவர்கள் மகிழ்ச்சியடைந்த போதும், தீர்ப்பின் சாராம்சம் தங்களுக்கு சாதகமாக இருக்குமா? என்று பரிதவித்தபடியே இருந்தனர்.


அன்று மாலையில் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகுதான், அதில் சொல்லப்பட்ட சாராம்சத்தின் முழுவிபரமும் அவர்களுக்குத் தெரிந்தது. நம்பிக்கையூட்டும் வகையில் இருந்த தீர்ப்பின் வரிகள், அவர்களுக்கு உற்சாகச் சிறகுகளை முளைக்க வைத்துவிட்டது. அப்படி என்னதான் அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது?


"ஒருவருக்கு ஏன் ஜாமீன் வழங்கப் படுகிறது என்றால், அவர் விசாரணைக்கு ஒழுங்காக ஆஜராவார் என்ற நம்பிக்கையில் தான்.
குற்றவாளி விசா ரணைக்கு சரியாக ஆஜராகமாட்டார் என்று தெரிந்தால் அவரது ஜாமீன் உரிமையை ரத்து செய்யலாம். அதே சமயம் தண்டனை என்பது ஒருவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு வழங்கப்படுவது. குற்றம் நிரூபிக்கப்படும்வரை ஒவ் வொரு குற்றவாளியும் நிர பராதிதான்.


குற்றம் சாட்டப்பட்ட நபர், தண்டனையின் கசப்பான சுவையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத் திற்காக மட்டுமே அவரை சிறைவைப்பது என்பது மோசமான தண்டிக்கும் மன நிலையையே காட்டும். தண்டனை என்பது குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு வழங்கப்படுவது என்கிற நீதியின் தத்துவத்துக்கு நாம் மரியாதை கொடுத்தாகவேண்டும்.


இங்கு ஜாமீன் கோருபவர்களை வெளி யில் விட்டால் சாட்சிகளைக் கலைப்பார்கள் என்பதை போதுமான ஆதாரங்களோடு சி.பி.ஐ.. நிரூபிக்கவில்லை.


இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணை யை முடித்துவிட்டது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே மீண்டும் விசாரணை நடத்துவதற்காக இவர்களை சிறையில் அடைக்கவேண்டும் என்பதை ஏற்க முடியாது'’ என அழுத்தமாக சொல்லப்பட்டிருக் கிறது.


தண்டனையின் கசப்பை உணர்த்துவதற்காக ஒருவரை உள்ளே வைக்கக்கூடாது என்ற அழுத்தமான வரிகளை அதிகமாக நம்புகிறது திகார் தரப்பு.


ஸ்பெக்ட்ரத்தில் கைதான 17 பேரில் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதால், மீதமுள்ள ராசா, கனிமொழி உள்ளிட்ட 12 பேரும் 2012 புத்தாண்டு சுதந்திர மனிதர்களாகலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கள்.


எனினும் எந்த நேரத்தில் எது நடக்குமோ என்கிற குழப்பமும் முழுதாக அவர்களை விட்டுவிலக வில்லை. காரணம், இதற்கு முன் அக்டோபர் 10-ந் தேதி ஆ.ராசா தவிர்த்த 13 பேரின் ஜாமீன் மனு பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ. தரப்பு, கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் மற்றும் ராஜீவ் அகர்வால், ஆசிப் பால்வா, கரீம் மொரானி ஆகியோரின் மனுக்களை எதிர்க்கவில்லை.


இதனால் அப்போதே கனிமொழி போன்றவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை சகல தரப்பிலும் உண்டானது. அப்போது உச்சநீதி மன்றம் கனிமொழி உள்ளிட்ட வர்களின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. ஏன் எதிர்க்கவில்லை என மறைமுகமாக கிடுக்கிப்பிடி போட.... இதைக்கண்ட பாட்டியாலா நீதிமன்றம் கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு அதிரடியாக ஜாமீனை மறுத்துவிட்டது. எனவேதான் டெல்லி உயர்நீதி மன்றத்தின் கதவைத் தட்டியது கனிமொழி, சரத்குமார் தரப்பு.
இதைத் தொடர்ந்து கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் டிசம்பர் 1-ந் தேதி விசாரிக்க இருந்த நிலை யில், 5 பேருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கிய தீர்ப்பு வந்த தால் தீர்ப்பு வந்ததுமே டெல்லியில் இருந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சென்னையில் இருக்கும் கலைஞரைத் தொடர்பு கொண்டு, டிசம்பர் 1-வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. சுப்ரீம்கோர்ட்டே ஜாமீனுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதால் உடனடியாக கனிமொழி ஜாமீனை விசாரிக்கக் கோருவோம் என்று தெரி வித்ததோடு, அதற்கான ஆயத்தங்களிலும் இறங்கினார்.


ஷ்யூரிட்டிகளும் ரெடிசெய்யப் பட்டன. இதைத் தொடர்ந்து நவம்பர் 24-ந் தேதி இந்த வழக்கை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், 25-ந் தேதி விசாரணை என ஒருநாள் ஒத்திவைக்க, தமிழகத்தில் இருந்து சென்றிருந்த தி.மு.க புள்ளிகளாலும் கனிமொழி குடும் பத்தினராலும் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


இருந்த போதும் ‘"நாளைக்கு ஜாமீன் கிடைத்துவிடும்' என கனிமொழிக்கு அனைவரும் ஆறுதல் சொல்லமுயன்றனர். லேசான காய்ச்சலால் சோர்வாக இருந்த கனிமொழியோ, ‘""இன்றோடு திஹாருக்குப் போய் 188 நாள் போய்விட்டது. தீர்ப்பு வரட்டும் பார்ப்போம். எப்போதும் எதுவும் நிச்சயமில்லை. இதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இந்த 6 மாத சிறை வாழ்க்கையில் எனக்கு எவ்வளவோ படிப்பினைகள். நிறைய சிந்தனைகளையும் திட்டங்களையும் வைத்திருக் கிறேன். தீர்ப்பு வரட்டும் பார்ப்போம்''’என்று சொல்ல, அனைவரின் விழிகளும் ஈரத்தில் பள பளத்தன.


ஆனால் கனிமொழியின் வழக்கறிஞர்களோ, ""இனி ஜாமீன் தராமல் இருக்க முடியாது. சி.பி.ஐ. ஜாமீன் தரக்கூடாது என்று எதிர்த்த வர்களுக்கே சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொ டுத்திருக்கும்போது, சி.பி.ஐ. அப்ஜெக்ஷன் தெரிவிக்காத நமது மனுவை எப்படி அது நிராகரிக்கும்'' என்றனர் உறுதியோடு.


முன்னாள் அமைச்சரான ஆ.ராசாவுக்கும் இனி பெயில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை யோடு, அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் வழக்கறிஞர்களும் கோர்ட்டுக்கு வந்த அவரை உற்சாகமாக முற்றுகையிட்டனர்.


ராசாவோ ""அவசரப்பட வேண்டாம். முதலில் வெற்றிகரமாக கனிமொழி வெளியே செல்லட்டும். அதன்பின் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் போட்டுக்கொள்ளலாம்''’என தனது வழக்கறி ஞர்களிடம் சொல்லிவிட்டார்.


டெல்லியில் முகாமிட்டிருக்கும் தி.மு.க. பிரமுகர்களோ, ""கனிமொழியோடுதான் சென்னை திரும்புவோம். இல்லையென்றால் டெல்லியின் உறவுக்கே குட் பை சொல்லிவிட்டுக் கிளம்புவோம்'' என்கிறார்கள் அழுத்தமாகவே.


ஸ்பெக்ட்ரம் போகும் போக்கைப் பொறுத்தே டெல்லியின் ஸ்திரத் தன்மை இருக்கும் என்பதால் இந்தியாவே கனி மொழியின் ஜாமீன் தீர்ப்பை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறது.


-டெல்லியிலிருந்து
உமர் முக்தார்


திகாருக்குத் தடை!


பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, 21-ந் தேதி ‘இனி இந்த வழக்கின் விசாரணை திகார் சிறைக் குள்ளேயே இருக்கும் நீதிமன்றத்தில் நடக்கும் ‘என அதிரடியாக அறிவிக்க, ஸ்பெக்ட்ரம் சிக்கலில் சிக்கியிருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறை யிட்டனர். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் ஒருசேர உட்கார்ந்து விசாரித்தனர். இது நிர்வாக சம்பந்தப்பட்ட ஆணையா? என விசாரித்த நீதிபதிகள், கடைசியில் திகார் சிறையில் விசாரணை நடத்த தடை விதித்தனர்.


No comments:

Post a Comment