Friday, November 11, 2011

நடிகையின் கதை!

செஸ் விளையாட்டின் தமிழ்ப் பெயர் கொண்ட படத்தின் படப்பிடிப்பில்... ஒரு காட்சி யில் நடிகையை ஸ்ரீ ஹீரோ லேசா மோதுவது போல் காட்சி.பேலன்ஸ் தவறி கொஞ்சம் வேகமாக மோதியதால் உடனே தன் காதலரான இளமை துள்ளிய டைரக்டருக்கு போன் போட்டார் நடிகை."என்னவோ... ஏதோ...' என பதறியடித்துக் கொண்டு வந்த டைரக்டரிடம் "ஸ்ரீ வேகமாக மோதியதால் பெயினா இருக்கு' என சின்னப் பிள்ளை மாதிரி சிணுங்க... நடிகையை சமா தானப்படுத்தினார் இளமை துள்ளிய டைரக்டர். அந்த அளவுக்கு இருவருமே பாசக்கார பயலும், பொண்ணுமாத்தான் இருந்தாக.
"காதல் கொண்ட' படத்தில்தான் முதன் முதலில் "சோ' நடிகையும், இளமை துள்ளிய ராகவ டைரக்டரும் இணைந்து பணியாற்றினார்கள். அப்போது இவர்களுக்குள் காதல் ரசாயன மாற்றம் எதுவும் நிகழவில்லை.அதன்பின் "வானவில் குடியிருப்பு' படத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்றிய போதுதான் இவர்களுக்குள் ஒரு அண்டர்ஸ்டேண்டிங்.




"வானவில் காலனி' படப் பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது... திடீரென டைரக்டருக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது. ஹோட்டல் ரூமிலேயே முடங்கிவிட்டார். அப்போது ஷூட்டிங் கேன்ஸனாது. ஆனால் நடிகையோ, "ஷூட்டிங் இல்லையே' என கிளம்பிவிடவில்லை. டைரக்டருடன் தங்கி ஒரு நர்சு போல எல்லா உதவிகளையும் செய்தார்.
காதலுக்கு நெருக்கமான, அதேசமயம் காதல் என்று தீர்மானிக்க முடியாத இந்த ஈர்ப்பில் சின்னதாக ஒரு இடைவெளி ஏற்பட்டிருந்த சமயம்...


"டெம்ப்பிள்' படத்தில் விரல் வித்தை நடிகருடன் நடிக்கப் போயிருந்தார் நடிகை. யாரையும் எளிதில் வசப்படுத்திவிடும் வம்பு, இந்த நடிகையையும் வசப்படுத்துவதற்கான வேலைகளில் இறங்கினார். ஹீரோவின் கவனம் இப்படி நடிகை மீது சிதறியதால் "ஹ' டைரக்டருக்கு ஹீரோ மீது செம கடுப்பு. இருந்தாலும் ஹீரோவை திட்ட முடியாமல் பொருமியபடி இருந்தார் "ஹ'."டெம்ப்பிள்' படத்தில் நடிகை சம்பந்த மான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட அன்றைய ராத்திரியில் நடிகையை வசியப்படுத்திவிட்டார் வம்பு. அந்த வசியத்தில் நடிகைக்கும் புதிய கிறக்கம் ஏற்பட்டுவிட்டது.


"நாளைக்கு நாம டிஸ்கஷன் பண்ணணும்' என வம்பு சொல்ல... தலையாட்டிவிட்டார் நடிகை.மறுநாள் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார் "ஹ'. ஸ்பாட்டுக்கு நடிகை வந்தார். வம்பு முகத்தில் வெளிச்சம். "ஹ' முகத்தில் கடுப்பின் சிவப்பு."காலையிலேயே ஊருக்கு கிளம்பியிருக்க வேண்டியவ.... எதுக்கு இப்ப இங்க வரணும்?' என "ஹ' கோபத்தில் கத்த...எல்லார் முன்னாலயும் கெட்ட வார்த்தையால் தன்னை "ஹ' திட்டியதால் அவமானத்தில் அழுதபடி... ஊருக்குக் கிளம்பினார் நடிகை. வம்புவோ, ஒன்றும் தெரியாதவர் போல இருந்துவிட்டார்.


இப்படி பல கசப்பான அனுபவங்களைக் கடந்து மீண்டும் இளமை துள்ளிய டைரக்டரிடம் வந்து சேர்ந்தார். இப்போது... இவர்களின் காதல் கன்ஃபார்ம் ஆனது.இவர்களின் காதல் விஷயம் இண்டஸ்ட்ரியில் பரவியதால் மற்ற ஹீரோக்களின், டைரக்டர்களின் தொல்லை ஏற்படவில்லை. இந்தக் காதல் நடிகைக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வளையமாக அமைந்தது."நான் உன்னை விட்டு விலகிட்டா என்ன பண்ணுவ?' என ஒரு மந்தகாச வேளையில் விளையாட் டுக்காகக் கேட்டார் டைரக்டர்.பாத்ரூமிற்குள் போய்விட்டு வந்த நடிகை பிளேடால் தன் கைகளை கீறிக்கொண்டு ரத்தம் வழிய நின்றார்.பதறிப்போனார் டைரக்டர். இவ்வளவு அஃபெக்ஷனாக இருந்தாலும்கூட "பாடல் கம்போஸிங்கிற்கு' எனச் சொல்லிவிட்டு இளைஞன் என்பதை பெயராகக் கொண்ட இசையமைப் பாளருடன் பாங்காக்கிற்கு அடிக்கடி பறந்தார் டைரக்டர். அங்கே பல நாட்டு குஜிலிகளுடன் பல்லாங்குழி ஆடிவிட்டு வந்தார்.


இப்படி அடிக்கடி இன்பச் சுற்றுலா நடத்தியதால் எரிச்சலாகி டைரக்டருடன் சண்டை போட்டார் நடிகை.காதலில் ஏற்பட்ட இந்த கனமான ஊடலால்... பூங்கா ஓட்டலில் ஃபுல் அடிக்க ஆரம்பித்தார் நடிகை.அதன்பின் இவர்களின் காதலில் ஊடலும், கூடலும் இரவும் பகலும் போல "சகஜமப்பா'வானது.அன்பு வச்சாலும் மூர்க்கத்தனம், கோபம் கொண்டாலும் மூர்க்கத்தனமாக போய்க்கொண்டிருந்த இவர்களின் முரட்டுக் காதல் கல்யாணத்திலும் முடிந்தது. ஆனால்... அந்த பந் தம் நீடிக்க வில்லை. இருவருக்கும் இடை யே வில்லியாக வந்தார் அந்த நடிகை.டைரக்டரும் "ட்ரியா' நடிகையும் கசமுசா பண்ணுவதாக செய்திகள் வந்தபோது "சோ' நம்பவில்லை.ஆனால்... "கையும் கலவியுமாக' மலேசியாவில் இருவரையும் பார்த்து விட்டார் "சோ.'அப்புறம்...?


(அனுபவம் பேசும்)

No comments:

Post a Comment